Vollständiger Artikel
விஜய் டிவியில் நாளை மறுதினம் நிறைவடைகிறது மகாநதி சீரியல். ’சரவணன் மீனாட்சி’, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – கதிர் ஜோடிகளுக்குப் பிறகு ஜோடிக்காகவே பார்க்கப்பட்ட சீரியல் என இந்த சீரியலைச் சொல்லலாம். விஜய் – காவேரி என்ற கேரக்டர்களில் தொடரில் லீட் ரோலில் நடித்த சாமிநாதன் – லக்ஷ்மிபிரியா ஜோடிக்கு சின்னத்திரை ஏரியாவில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ’விக ஃபேன்ஸ்’ என சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி இந்த தொடருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் ரசிகர்கள் . கடந்தாண்டு விகடன் சின்னத்திரை விருதையும் ஜோடியாக வந்து வாங்கினார்கள் இவர்கள். இந்த நிலையில் சீரியல் நிறைவடைவதால் ரொம்பவே வருத்தத்தில் இருக்கும் தொடரின் ரசிகர்கள் இருவரையும் மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். `மகாநதி’ லக்ஷ்மி பிரியா சன் டிவியிலும் ‘ஆடுகளம்’ சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த சீரியல் முடிவடைவது குறித்து சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் பெரிய வருத்தத்தில் இருக்கின்றனர். இது குறித்து சீரியலின் யூனிட் தொடர்பிலிருக்கும் சிலரிடம் பேசினோம். ‘ஒளிபரப்பு தொடங்கின போதே ரொம்ப தாமதமாகவே தொடங்கியது. டெல்லி கணேஷ் சார் தொடரில் கமிட் ஆகி சில எபிசோடுகள் நடிச்ச நிலையில் திடீரென இறந்துட்டார். அவருக்குப் பதில் காத்தாடி ராமமூர்த்தி கமிட் ஆனார். நடிகை சச்சு, தீபா, நடிகர்கள் ராஜேந்திரன் காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ், சல்மான்னு பெரிய பட்டாளத்துடன் ஆரம்பமான சீரியல் முதல்ல பிரைம் டைமில் போச்சு. ஆனா என்ன காரணமோ தெரியல, திடீர்னு பகல் நேரத்துக்கு மாத்தினாங்க. இந்த நேர மாற்றம் சில ஆர்ட்டிஸ்டுகளுக்கு அதிருப்தியைத் தந்ததாச் சொன்னாங்க. காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ், சல்மான் மூணு பேருமே தொடரில் இருந்து வெளியேறுவதாகச் சொல்லிட்டாங்க. டெல்லி கணேஷ் சேனல்ல இருந்து இவங்களைச் சமாதானம் செய்யும் முயற்சி நடந்தும் அது பலனளிக்கலை. முக்கியமான மூணு கேரக்டர்கள் மாறுவதால் அவங்களுக்குப் பதில் வேறு ஆர்ட்டிஸ்டுகளைக் கமிட் செய்தாலும் சீரியலுக்கு ரேட்டிங் கிடைக்குமாங்கிற தயக்கம் சேனலுக்கு இருந்ததால் மொத்தமா சீரியலை முடிக்க சொல்லிட்டாங்க. அடுத்த சில வாரங்களில் சீரியலுக்கு எண்ட் கார்டு போடப் பட்டு விடும். மொத்தத்துல மூணு ஆர்ட்டிஸ்டுகளுக்காக மத்த நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்கள்னு பல பேருக்கு சான்ஸ் பறி போகறதுதான் பெரிய வருத்தமா இருக்கு’ என்கிறார்கள் இவர்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



