சென்னை, 'நீட்' வினாத்தாள் கசிவு, 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிராகவும் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், மாணவர்களின் போராட்டத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “நாடெங்கும் போராடுவர்களுக்கு தேவை தீர்வும் ஆதரவும்; மௌனமோ, அச்சுறுத்தலோ, வன்முறையோ அல்ல! மாணவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/student-protests-are-justified-hiphop-adhi




