டுப்லின், அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த 10ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. 2வது ஒருநாள் போட்டி இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி பிரெடி நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏமி ஹண்டர் அதிகபட்சமாக 67 ரன்கள் சேர்த்தார். அதேவேளை, சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் டெண்ட்ரா டோடின், ஹெலி அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/ireland-women-vs-west-indies-women-2nd-odi




