Vollständiger Artikel
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை திருடியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் அனுகல்ப் மிஸ்ரா மற்றும் அவரது மைத்துனர் லவகுஷ் மிஸ்ராவும் ஆகியோரும் அடக்கம். இதில் அனுகல்ப் மிஸ்ராவும், டின்னு யாதவும் தான் உண்டியல் பணம் திருடுவதில் முக்கிய குற்றவாளிகளாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் அனுகல்ப் வீட்டில் சோதனை நடத்தியபோது அவர் ஊருக்கு வெளியில் பிரமாண்டமாக பண்ணை வீடு ஒன்றை கட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. அதோடு அனுகல்ப் சொந்தமாக ஸ்கார்பியோ கார் ஒன்றையும் வாங்கி இருக்கிறார். அவர் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அனுகல்ப் மிஸ்ராவின் வீட்டில், போலீஸார் சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அவரது நிதி நிலை மற்றும் வாழ்க்கை முறை குறித்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் விசாரித்தனர். அவரது அண்டை வீட்டாரும் குடும்பத்தின் நிதி நிலைமையில் ஒரு வியத்தகு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினர். நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பம் மோசமான நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், ஆனால் இப்போது குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அயோத்தியிலும் சொந்த வீடு வாங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவரது மைத்துனர் லவகுஷ் சமீபத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்பு கொண்ட இரு சக்கர வாகனம் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரின் சொத்து மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




