ஈரோடு, தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை -ஈரோடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை -ஈரோடு ரெயில் மூர்த்திப்பாளையம் மற்றும் கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16846) நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 24, 26-ந் தேதிகளில் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அங்கிருந்து ஈரோட்டுக்கு வராது. இதேபோல் பாலக்காடு டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் -திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16844) நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 24, 26-ந்தேதிகளில் புகலூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மாற்றுப்பாதை மேலும் கோவை சந்திப்பில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும். கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16322) நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 24, 26-ந்தேதிகளில் கோவை -திண்டுக்கல் இடையே மாற்று பாதையில் இயக்கப்படும். அதாவது போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக திண்டுக்கல் செல்லும். இதன் காரணமாக இந்த ரெயில் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் சாலை, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இந்த ரெயில் வராது. மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-sengottaierode-train-service




