சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் சாய் அபிநோவ் (18). பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்த இவர், மருத்துவ படிப்பில் சேருவதற்காக, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை இருமுறை எழுதியுள்ளார். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால் மூன்றாவது முறையாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் மீண்டும் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உணவு அருந்தி விட்டு அறைக்கு சென்றுள்ளார். NEET மரணம் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பெற்றோர், கதவை திறந்து பார்த்தபோது, சாய் அபிநோவ் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. "இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட மோடி அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை! இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவைப்படுகிறது? மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சினையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாணிக்கம் தாக்கூர் அன்பு மாணவச் செல்வங்களே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல. ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள்! இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம். மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மேடையில் விஜய்க்கு உரிய மரியாதையை பெற்றுத் தந்தது இந்த முரசொலி மாறன் மகன்தானே?" - தயாநிதி மாறன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/abhinov-a-student-preparing-for-the-neet-exam-died-by-suicide




