சென்னை, இபிஎப்ஒ, இஎஸ்ஐசி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணும் முகாம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆகஸ்ட் 27யில் குறைதீர்ப்பு முகாம் மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழகம் இணைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், "நிதி உங்கள் அருகில்", “சுவிதா சமகம்" என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு,குறைதீர்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம், 2026 ஆகஸ்ட் 27 அன்று காலை 9.15 மணி முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இணைய தளம் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் தங்களுடைய இபிஎப்ஒ, இஎஸ்ஐசி தொடர்பான கோரிக்கைகள், குறைகள், சந்தேகங்களை இந்த முகாமில் நேரடியாக முன்வைத்து தீர்வு பெறலாம். என்ற இணைய இணைப்பின் மூலம் விவரங்களைப் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடங்கள் மதுரை பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, 19/28, வளார் நகர் பின்புறம், இலந்தைக்குளம், மதுரை 625 023 சிவகங்கை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, கிளங்காட்டூர் மானாமதுரை சிவகங்கை -630606 இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பட்டினம்காத்தான், ராமநாதபுரம் 623503 தேனி தி கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,, பேருந்து நிலையம் அருகில், உத்தமபாளையம் 625533, தேனி மாவட்டம் விருதுநகர் செயின்ட் பால்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 15, காமராஜ் நகர், பழைய பேருந்து நிலையம் அருகில், ராஜபாளையம் 626117 திண்டுக்கல் பாரத் பொதுப் பள்ளி (சிபிஎஸ்இ), மேற்கு ஆயக்குடி, பழனி தாலுகா, திண்டுக்கல்-624 613 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/epfo-esic-grievance-camp-six-districts-august-27




