புதுடெல்லி, மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டு சென்றார். பயணத்தின் முதல் கட்டமாக, நாளை (ஜூலை 20) அவர் மால்டோவா நாட்டிற்குச் செல்கிறார். அதனைத் தொடர்ந்து, ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர் வடக்கு மாசிடோனியாவிற்குச் செல்கிறார். ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை ருமேனியாவிற்கு திரவுபதி முர்மு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஜூலை 25ம் தேதி பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்புகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/president-draupadi-murmu-leaves-for-a-state-visit-to-3-countries




