சென்னை, வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சுமுகத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியா முழுவதும் வங்கிகளில் பணியாற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அக்டோபர் 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வாரம் 5 நாள் வேலை என்பதை நடைமுறைப்படுத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும், அவுட் சோர்சிங் முறையை ஒழித்துக் கட்ட வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், திறன் ஊக்குவிப்பு தொகை என்ற பெயரில் பாரபட்சம் காட்டப்படுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 11 அன்று ஒரு வேலை நிறுத்தம் நடத்தப்பட்டப்போதிலும், அப்போராட்டத்தை மதித்து அரசோ, வங்கி நிர்வாகமோ பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை. எனவேதான், முறையான முன் அறிவிப்பு தரப்பட்டு, இந்த வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அதிகாரிகளை, ஊழியர்களை மிரட்டுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. மிரட்டும் போக்கை கைவிட்டு, வங்கி ஊழியர், அதிகாரிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சுமுகத் தீர்வு காண முன்வர வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/bank-employees-protest-government-must-seek-amicable-solution




