பெங்களூரு, தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பயணிகளின் வசதிக்காக எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-ராமேசுவரம்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில்கள் (வண்டி எண்: 07355/07356) சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07355) வருகிற 27-ந்தேதி வரை இயக்கப்பட இருந்தது. இந்த ரெயில் சேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 29-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07356) வருகிற 28-ந்தேதி வரை இயக்கப்பட இருந்தது. இந்த ரெயில் சேவை அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/extension-of-hubballi-rameswaram-special-train-service




