மும்பை, மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக் கும் பணி தொடங்கி உள்ளது. மும்பை ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை பி.கே.சி. முதல் நவிமும்பையில் உள்ள கன்சோலி சாவ்லி பகுதி வரை 21 கி.மீ.க்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 5 கி.மீ.க்கு சுரங்கம் தோண்டும் பணி முடிந்து உள்ளது. கடந்த 5-ந் தேதி விக்ரோலி பி.கே.சி. இடையே 6 கி.மீ.க்கு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தநிலையில் சாவ்லி விக்ரோலி இடையே 10 கி.மீ. சுரங்கம் தோண்டும் 2-வது கட்டப்பணிகள் நேற்று தொடங்கியது. இதில் 7 கி.மீ. சுரங்கப்பாதை தானேயில் கடலுக்கு அடியில் வரு கிறது. இந்தியாவில் ரெயில்வே வரலாற்றில் கடலுக்கு கீழ் சுரங்கப்பாதை அமைப்பது இதுவே முதல் முறையாகும். 500 யானைகளுக்கு சமம் சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபடும் ராட்சத எந்திரத்தின் முன் முனைப்பகுதி 13.6 மீட் டர் விட்டம் கொண்டதாகும். இது 4 அடுக்குமாடி கட்டிட உயரத்துக்கு சமமானதாகும். 96 மீட்டர் நீளமுள்ள இந்த எந்திரம் 3 ஆயிரத்து 200 டன், அதாவது 500 ஆசிய யானைகளின் எடைக்கு சமமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/second-tunnel-boring-machine-starts-to-excavate-indias-first-undersea-tunnel-beneath-thane-creek-in-maharashtra-for-mumbaiahmedabad-bullet-train-project




