சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலாப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஆழ்ந்த இரங்கல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-from-tamil-nadu-lost-their-lives-in-vietnam-boat-accident-ttv-dinakaran-condoles




