சென்னை, அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, இரட்டை அர்த்தப் பேச்சு போன்றவற்றைப் பேசுவதையே இன்றைய திமுக வேலையாக வைத்துள்ளது என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். விஜய்யை விமர்சித்த சேகர்பாபு சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார். சேகர்பாபுவின் பேச்சுக்கு தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டனம் தெரிவித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “திமுகவைப் பற்றி சின்னக் குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்வார்கள். ஆபாசமாக, கீழ்த்தரமாக, அவதூறாகப் பேசுவது மட்டும்தான் திமுகவுக்கு தெரியும். அவர்களுக்கு வேறு அரசியலே தெரியாது. அரசியல் நாகரிகம் சுத்தமாகக் கிடையாது அவர்களைப் பொறுத்தவரை கருத்தியல் ரீதியாகப் பேசுவதற்கு ஆட்களே கிடையாது. இன்று முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மிகக் கேவலமாகப் பேசியிருக்கிறார். அறநிலையத்துறை அமைச்சராக, ஆன்மீகத் தலங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தவர் கேவலமான சொற்களைப் பேசியுள்ளார். அரசியல் நாகரிகம் திமுகவில் சுத்தமாகக் கிடையாது. அவர்களிடம் அது மொத்தமாக அழிந்துவிட்டது. மூன்றாம் தர பேச்சாளர்கள் போன்று பேசி வருகின்றனர். இன்று சேகர் பாபு பேசியதை அவர் வீட்டுப் பேரப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் போட்டு காண்பிப்பாரா? இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா? இது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த மாதிரி கீழ்த்தரமாகப் பேசுவதற்கு எங்களின் முதல்-அமைச்சர் எங்களுக்குக் கற்றுத் தரவில்லை. ஒழுக்கமாக, நேர்மையாகப் பேச மட்டுமே எங்களுக்கு முதல்-அமைச்சர் கற்றுக் கொடுத்துள்ளார். இவர்களைப் போன்று வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்த எங்களுக்குத் தெரியாமல் இல்லை. முதல்-அமைச்சர் எங்களை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முக ஸ்டாலின் அவரின் கட்சிக்காரர்களை இப்படித்தான் வளர்த்திருக்கிறார் என்பதற்கு சேகர்பாபு பேசியது ஒரு உதாரணம். அண்ணா இருந்த திமுக மாதிரி இன்றைய திமுக கிடையாது. அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, இரட்டை அர்த்தப் பேச்சு போன்றவற்றைப் பேசுவதையே இன்றைய திமுக வேலையாக வைத்துள்ளது இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-politics-to-speak-in-such-a-low-quality-manner-minister-ramesh-condemns




