சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவு வாயில் முன்பு தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று காலை வந்துள்ளார். ஆனால், புகார் மனு வழங்குவதற்கு முன்னதாகவே, மூன்று பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியில் தாய் மற்றும் இரு மகள்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் உடனடியாக காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப் பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று வந்திருந்ததாக தகவலகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தலைமை செயலக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/3-women-attempt-suicide-at-chennai-secretariat




