சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.270-ம் சவரனுக்கு ரூ.2,160-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750-க்கும் ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனையானது. இன்று காலையில் தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது. இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/evening-gold-price-sharp-rise-whats-the-status




