சென்னை, சென்னை பட்டினம்பாக்கத்தில வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பிலான இடத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் வேந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நிதி நெருக்கடியில் இருப்பதாக அரசு அறிவித்திருக்கக்கூடிய சூழலில், 1,200 கோடி ரூபாய் செலவு செய்து புதிய தலைமை செயலகம், கட்டுவதற்கு பதிலாக ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டிடத்தை புதுப்பித்து பயன்படுத்தினால் மக்களுடைய வரிப்பணம் சேமிக்கப்படும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்ட்ரல் ரெயில் நிலையம், ஐகோர்ட்டு, பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்தால் பொதுமக்கள் வந்து செல்வது கடினமாக இருக்கும் எனவும், பட்டினப்பாக்கத்தில் புதிய வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டினால், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கக்கூடிய திட்டம் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதோடு மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கின் முடிவு வரும் வரை தலைமை செயலக கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-in-high-court-seeking-to-halt-the-construction-of-the-new-secretariat-at-pattinapakkam




