சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும் ஊடகப் பிரிவு பொறுப்பாளருமான ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கண்டனங்களை தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்கள் மீதும் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட மக்கள் விரோத மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வருகின்ற 25.07.2026, சனிக்கிழமை மாலை 05:30 மணியளவில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் முத்துரங்கம் சாலையில் நடைபெறவுள்ளது. மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர். வன்னியரசு அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், எம்.பி. அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சு. வெங்கடேசன், எம்.பி. அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி, எம்.பி. அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ, எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார்கள். குலாம் அகமது மிர் இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ். ராஜேஷ்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு எஸ். பீட்டர் அல்போன்ஸ், Ex.MP அவர்கள் விளக்க உரை ஆற்றுகிறார். மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் மேலும் இக்கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்-முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார / / சர்க்கிள், வட்ட, நகர, பேரூர் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அதன் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலை பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-hold-a-public-meeting-the-day-after-tomorrow-condemning-the-central-government-leaders-of-alliance-parties-to-participate




