சென்னை, மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாத்திமா சனா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. ஆசிய கோப்பை மட்டுமின்றி ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியையும் வழிநடத்த உள்ளார். 2026 மகளிர் ஆசிய கோப்பை ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் செப்டம்பர் 1-ம் தேதி தாய்லாந்தை எதிர்கொள்கிறது. அதன்பிறகு செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவையும், செப்டம்பர் 7-ம் தேதி ஹாங்காங்-சீனாவையும் எதிர்கொள்ளும். ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: பாத்திமா சனா, ஆயிஷா ஜபர், இமான் நசீர், ஈமான் பாத்திமா, குல் பெரோசா, மொமினா ரியாசத், முனீபா அலி சித்திக்கி, நஜீஹா அல்வி, நஷ்ரா சந்து, சாடியா இக்பால், சாய்ரா ஜபீன், ஷவால் ஸுல்பிகார், துபா ஹசன், உம்-இ-ஹானி, வஹீதா அக்தர் இடம்பெற்றுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/asia-cup-pakistan-squad-announced




