சென்னை, சென்னை அண்ணா சாலையில் உள்ள மவுண்ட் ரோடு பிலாலில் நாளை நடைபெறும் ‘உங்கள் அருகில் பி.எப்.' முகாமில் கலந்து கொண்டு உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம். இ.பி.எப்.ஓ. அமைப்பின் தகவல் வைப்பு நிதி மண்டல ஆணையர் ரேணு ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எப்.ஓ.) சார்பில் “உங்கள் அருகில் பி.எப்." என்ற பெயரில் முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மவுண்ட் ரோடு பிலாலில் நாளை (திங்கட்கிழமை) முகாம் நடைபெற உள்ளது. இதுவரை தீர்க்கப்படாத குறைகளை கொண்டுள்ள இ.பி.எப். சந்தாதாரர்கள் உள்பட எந்தவொரு பங்குதாரரும், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக உரிய ஆவணங்களுடன் நேரடியாக வருகை தரலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/pf-near-you-camp-tomorrow-in-chennai-we-can-address-grievances




