சென்னை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைப் பறித்து, கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! NEET முறைகேடுகளையும், வினாத்தாள் கசிவுகளையும் கூடத் தடுக்கத் துப்பில்லாத மத்திய கல்வி அமைச்சகம், இப்போது பல்கலைக்கழகங்களைச் சீரழிக்கப் பார்க்கிறது! UGC, AICTE போன்ற அமைப்புகளைக் கலைத்துவிட்டு கொண்டு வரப்படும் 'Viksit Bharat Shiksha Adhishthan மசோதா 2025' இந்தியாவின் உயர்கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் எதேச்சதிகார நடவடிக்கை! ஒருபுறம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் ஊழல், மறுபுறம் மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் சர்வாதிகாரம்! மோடி அரசும், அவரது திறமையற்ற கல்வி மந்திரியும் இந்திய மாணவர்களின் கனவுகளோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு எதிராகத்தான் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களின் உரிமைகளுக்காக நம் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி Chhatron Ki Goonj இயக்கம் மூலம் சமரசமற்ற போரைத் தொடங்கியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் இந்த மோடி அரசின் அட்டூழியங்கள் அனைத்திற்கும் 2029-ல் முற்றுப்புள்ளி வைக்கப்படும்! காலம் மாறும், நம் ஆட்சி மலரும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-is-trying-to-take-complete-control-of-the-education-sector-manickam-tagore




