சென்னை, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மட்டுமின்றி, தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தையும் அவர் தயாரித்துள்ளார். யூடியூபர் பாரத் கதாநாயகன் இப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கட்சி சேர’ பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரும் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "திரையரங்குகளில் வயிறு குலுங்கச் சிரிக்கும் கொண்டாட்டத்திற்கு முன் ஒரு சிறிய இடைவேளை! 'மிஸ்டர் பாரத்' (Mr. Bhaarat) திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக இருந்தது. அதே தேதியில் பல முக்கியத் திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால், 'மிஸ்டர் பாரத்' படத்தின் திரையரங்கு வெளியீட்டைச் சற்று ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். திரைப்படங்களை நேசிக்கும் ரசிகர்களாக, வரவிருக்கும் இந்தப் படங்கள் குறித்து நாங்கள் மிகுந்த உற்சாகம் கொள்கிறோம்; அவை அனைத்தும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறோம். 'மிஸ்டர் பாரத்' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். சிரிப்பு, கொண்டாட்டம் மற்றும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவங்கள் நிறைந்த இந்தச் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தை உங்கள் அனைவருக்கும் வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அன்புடன், 'மிஸ்டர் பாரத்' படக்குழுவினர். மிஸ்டர் பாரத் விரைவில் திரைக்கு வருகிறது." என்று தெரிவித்துக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/release-of-the-film-mr-bharat-produced-by-lokesh-kanagaraj-postponed



