சென்னை, சென்னையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளநிலையில் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. டிஎன்பிஎல் 8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், முதற்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நடந்தது. இதுவரை 20 ஆட்டங்கள் நடந்துள்ளன. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீல் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (6 புள்ளி), நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் (6 புள்ளி) ஆகிய அணிகள் வகிக்கின்றன. 2-வது கட்ட ஆட்டங்கள் இறுதிப்போட்டி உள்பட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது. நாளைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்னும் 12 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. டிக்கெட் விற்பனை இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்ட்டரில் காலை 10.30 மணியில் இருந்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். குறைந்த விலையாக ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதே போல் District.in என்ற இணையத்தளம் மூலமாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-cricket-in-chennai-ticket-sales-begin-today




