புதுடெல்லி, கூகுள்பே போன்ற யு.பி.ஐ. மூலமான பணப்பரிவர்த்தனைக ளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் முக்கியமாக யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரூ.300 வரை (ரூ.75 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிமாற்றம்) வசூலிக்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நுகர்வோரை பாதிக்கும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் இதை அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன. அந்தவகையில் ரூ.2,000-க்கு மேற்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் நுகர்வோர் மீது சுமத்தப்படாது என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களை வங்கிகளும், இந்திய வங்கிகள் சங்கமும் களைவார்கள் எனவும் அவை தெரிவித்தன. இதைப்போல யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பைசா கூட அரசு கஜானாவுக்கு செல்லாது எனவும், அவை வங்கிகள் உள்ளிட்ட யு.பி.ஐ. சார்ந்த சேவைகளுக்கே பிரித்து வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/upi-charges-will-not-be-imposed-on-consumers-central-government-statement




