திருச்சி, திருச்சி நகர்ப்புற கோட்டம் E.B. ரோடு துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி நகர்ப்புறம் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், திருச்சி நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட E.B. ரோடு துணை மின் நிலையத்தில் இன்று (15.7.2026, புதன் கிழமை) காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்படும். காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை அதன்படி மேற்சொன்ன துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மர்ந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சொராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், வில்வாஸ் நகர், வேதாத்திரி நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-trichy-today




