சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்தான் பச்சைப் பட்டாணி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான பல முக்கிய சத்துக்கள் கிடைப்பதோடு, பல்வேறு நோய்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். ஒரு கப் பச்சைப் பட்டாணியில், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் K-இல் சுமார் 46 சதவீதம் வரை கிடைக்கிறது. இந்த வைட்டமின் எலும்புகளை வலுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. பட்டாணி சிறந்த புரதச் சத்து கொண்ட உணவாகும். ஒரு கப் பட்டாணியில் சுமார் 8 கிராம் புரதம் உள்ளது. தசை வளர்ச்சி, உடல் செல்கள் புதுப்பித்தல் மற்றும் உடல் வலிமையை பராமரிக்க புரதம் மிகவும் அவசியம். இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. ஒரு கப் பட்டாணி சாப்பிடுவதன் மூலம், ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் சுமார் 36 சதவீதம் கிடைக்கிறது. இதனால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சினையும் குறையும். பட்டாணியில் உள்ள பைசம் சபோனின் மற்றும் பைசோமோசைடு போன்ற இயற்கைச் சேர்மங்கள், உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க உதவுகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. பட்டாணி உடலுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் நன்மை செய்கிறது. பட்டாணிச் செடிகள் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க உதவுவதால், தோட்டத்தில் இதை வளர்ப்பது மற்ற தாவரங்களின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும். இரும்புச் சத்து நிறைந்த பட்டாணி, ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தில் சுமார் 16 சதவீதம் வரை வழங்குகிறது. இது ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுவதுடன், ரத்தச்சோகை ஏற்படும் அபாயத்தையும் குறைக்க உதவும். மக்னீசியம் நிறைந்த உணவுகளில் பட்டாணியும் ஒன்று. ஒரு கப் பட்டாணியில், ஒரு நாளைக்கு தேவையான மக்னீசியத்தில் சுமார் 22 சதவீதம் கிடைக்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. சருமத்துக்கு ஏற்ற சோப்பை எப்படி தேர்வு செய்வது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/amazing-changes-that-occur-in-the-body-if-you-eat-peas-daily




