காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் திறக்காத கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. நீர் இருப்பு இன்று காலை நிலவரப்படி, கர்நாடக அணையில் 76% பயன்பாட்டுக்குரிய நீர் இருப்பு உள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கிடைக்க வேண்டிய 64 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக, தமிழ்நாடு 14 டிஎம்சி நீரை மட்டுமே பெற்றுள்ளது. விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாடு 55.29% நீரைப் பெற்றிருக்க வேண்டும். இதனால் சுமார் 20 டிஎம்சி நீர் நிலுவையில் இருக்கிறது"என்று வாதிட்டார். காவிரி நீர் இதனைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு தண்ணீர் திறக்காதது ஏன்? இயற்கை கொடுத்த மழை நீரை முழுமையாக தேக்க முடியவில்லை என்ற காரணத்தால் திறந்துவிடப்பட்டதா? என்று நீதிபதிகள் கர்நாடக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று விசாரணையை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடைபட்ட காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/water-must-be-released-into-the-cauvery-for-the-next-week-in-accordance-with-the-management-authoritys-order-supreme-court




