சென்னை, சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் - உதயநிதி பரஸ்பர வணக்கம் தெரிவித்துக்கொண்ட சம்பவம் உறுப்பினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று காலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக முதல்-அமைச்சர் விஜய் காலை 9.57 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அப்போது அவர் உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். காலை 9.58 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்யும், எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் நேற்று கைதாகி விடுதலையான நிலையில் இன்று சட்டசபைக்குள் வந்ததும் எப்போதும் போல இருவரும் ஒருவொருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings-in-the-assembly




