புதுடெல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான ஊழல் புகார் வழக்குகளில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் பி.வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உரிமை இல்லை. மாநில அரசை பிரதிநிதித்து வப்படுத்தும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பலன் அளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, அரசு தரப்பு வக்கீலை நியமிக்கும் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை கலந்து ஆலோசிக்க வேண்டி உரிமை கோர முடியாது. அரசுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.செந்தில் முருகன் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் ஆக நியமிக்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/case-against-senthil-balaji-tamil-nadu-government-files-affidavit-in-supreme-court




