Vollständiger Artikel
மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952- இல் தொடக்கப்பள்ளி ஒன்றானது தொடங்கப்பட்டது. இப்பள்ளியானது 2008இல் மீணடும் மறுசீரமைக்கப்பட்டு, அப்பகுதி மாணக்கர்களின் தொடக்ககல்விக்கு ஆவன செய்து வருகிறது. ஆனால், இப்பள்ளியில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனி கழிவறைகள் இல்லை என்பதையும், இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியமான மனநிலையை பற்றியும் விகடனில் 03.08.2025 "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல"- பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம். மயிலாடுதுறை: விகடன் செய்தி எதிரொலி; பள்ளியில் ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கிய ஆட்சியர் அச்செய்தியானது மயிலாடுதுறை மாவட்ட ஆட்யசிரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, ஒரு வாரத்திற்குள் ஆண்களுக்கு தனிகழிவறை அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கி எட்டு மாதங்களை கடந்த நிலையிலும் கழிவறை கட்டும் பணியானது தொடங்கப்படாமல், ஒதுக்கிய நிதி கிடப்பிலேயே போடபபட்டது. இதனைத்தொடர்ந்து நாம் மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) தியாகராஜன் அவர்களிடம் நிதி ஒதுக்கி கழிவறை கட்டும் பணிகள் தொடங்கபடவில்லை என்பதைக் குறித்து கேட்டபொழுது, நம் கண் முன்னரே கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் ஆகியோரை தொடர்புக் கொண்டு விரைவில் கட்டும் பணியினை தொடங்க அறிவுறுத்தி, இரண்டு நாட்களுள் கட்டும் பணிகள் தொடங்கும் எனக் கூறினார் அவர் கூறிய மறுநாளிலிருந்தே கழிவறை கட்டுவதற்கு அளவு எடுத்து குழி வெட்டுதல் போனற பணிகள் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட பணியினை பாதியிலேயே கிடப்பில் போடாமல், விரைந்து கழிவறையினை கட்டி மாணவர்களின் அசௌகரியமான மனநிலைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர் பொது மக்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



