‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்பது முன்னோர்களின் வாக்கு. எத்தனையோ புண்ணிய தலங்களுக்குச் சென்று, பல தெய்வங்களை வழிபட்டாலும், பரம்பரையைக் காக்கும் குலதெய்வ வழிபாடே எல்லாவற்றிலும் முதன்மையானது. குலதெய்வம் என்பது குலத்தை, அதாவது பரம்பரையை காக்கும் தெய்வமாகும். முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த தெய்வம் இது. பெற்ற தாய் போன்று, பிள்ளைகள் கேட்காவிட்டாலும் 'என்ன தேவை' என்பதை அறிந்து, அவர்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு. எனவே எந்தக் காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம். வேரின்றி மரங்கள் செழிப்பதில்லை; அதுபோல குலதெய்வ வழிபாடின்றி வாழ்வு சிறப்பதில்லை. முன்னோர் ஆசி கிடைக்கும் குலதெய்வ சன்னிதானத்தில் நின்று வழிபடும்போது, முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடக்கும். ஏனென்றால் முன்னோர்களும் அதே குலதெய்வத்தின் சன்னிதியில்தான் வழிபட்டிருப்பார்கள். ஒருவருக்கு ஜாதகத்தில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும், குலதெய்வத்தின் அருள் இருந்தால் அந்தத் துன்பங்கள் அவரை பாதிக்காது. அதே சமயம், குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற எந்தத் தெய்வங்களின் அருளும் கிடைக்காது. குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக நின்று காப்பது குலதெய்வமே ஆகும். வீட்டில் எந்தவொரு சுபகாரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் குலதெய்வத்தை மனதார வணங்கினால், தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி உண்டாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/kula-deivam-valipadu-the-foremost-worship




