அட்லாண்டா, அமெரிக்காவில் அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடியது. போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-வது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் பிக் போர்ட் தண்ணீர் பாட்டிலில் ரகிசயம் வைத்திருந்தது போட்டிக்கு பிறகு தெரிய வந்துள்ளது. போட்டி ஒருவேளை பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றால், அர்ஜென்டினா வீரர்களின் பெனால்டியை எந்த பக்கம் சென்று தடுக்க வேண்டும் என இங்கிலாந்து கோல் கீப்பர் பிக் போர்ட்டின் தண்ணீர் பாட்டிலில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. போட்டிக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை அவர் விட்டு சென்றதால், இந்த ரகசியத்தை மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் பார்த்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/football/to-defeat-argentina-england-goalkeeper-kept-a-secret-in-a-water-bottle




