சென்னை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்பால் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. வெண்கலப் பதக்கம் இந்தியாவின் குயின்சி ஜோகிம் டிசௌசா - முகமது அனாஸ் இம்ரான் பெக் ஜோடி, நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் 'ரிப்பேசார்ஜ்' சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி, பிலிப்பைன்ஸின் ஜோஹானா அபுலென்சியா - பிரின்ஸ் அகஸ்டின் ஜோடியை எதிர்கொண்டது. 2-0 என அபார வெற்றி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் செட்டை 12-3 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2-வது செட்டிலும் சிறப்பாக விளையாடி 12-6 என வென்றது. இதன் மூலம் இந்திய ஜோடி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்துக்கு முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-quimcy-imran-beg-to-play-for-bronze-medal-after-repechage-win




