நாமக்கல், நாமக்கல் மாவட்டம், நன்செய் இடையாறில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை 10,008 பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் பால்குட அபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) காலை கோவிலில் கணபதி ஹோமமும், யாக வேள்வியும் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் இரவு கோயில் வளாகம் முன்பு 1008 குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் குவிந்தனர் விழாவின் சிகர நிகழ்வான 10 ஆயிரத்து 8 பால்குட அபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதற்காக அதிகாலை முதலே பால்குடங்கள் மற்றும் அபிஷேகத்திற்கான பாலுடன் பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலை வரை அபிஷேகம் நடைபெற்றது. பால்குட அபிஷேக விழாவில் கரூர், நாமக்கல், சேலம், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/aadi-friday-10008-pal-kudam-abhishekam-at-nanjai-edayar-maha-mariamman-temple




