ஐதராபாத், ஆந்திராவில் தனியார் பள்ளிகளில் இருந்து பெருமளவில் மாணவர்கள் வெளியேறி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதை ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.எஸ். பிளஸ்) வெளியிட்ட தரவுகள் காட்டுவதாக கூறி முன்னாள் முதல்- மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில அரசை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'உண்மையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக குறைந்துள்ளதால்,1.1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளுக்கு மாறியதாக மாநில அரசு வெளியிட்டுள்ள கூற்றை, 2025-26-ம் ஆண்டுக்கான யு.டி.எஸ் பிளஸ் தரவுகள் தெளிவாக மறுக்கின்றன' என கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/student-enrollment-in-andhra-pradesh-is-low-jagan-mohan-reddy-alleges




