சென்னை சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமைய 1 கத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று, நிருபர் களிடம் கூறியதாவது:-விடுதலைப் போராட்ட வீரர் என்கின்ற முறையில் நல்லகண்ணுவிற்கு அரசு ஒதுக்கிய வீட்டை, அவரது விருப்பப்படி அரசிடமே திரும்ப ஒப்படைக்கிறோம். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 28-ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம். பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அன் றைய தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இடதுசாரி மாணவர் அமைப்புகளைக் கண்காணித்தல் தொடர்பான சுற்றறிக்கைக்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும். மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி பேரணிக்காக தமிழகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரெயிலுக்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-provide-cars-to-mlas-must-be-dropped-cpis-veerapandian




