திருச்சி, அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத் தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 2-வது முறையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும், இக்கோவிலின் தக்காருமான ஞானசேகரன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.84 லட்சத்து 75 ஆயிரத்து 311 ரொக்கமும், ஒரு கிலோ 718 கிராம் தங்கமும், 2 கிலோ 280 கிராம் வெள்ளியும் கிடைத்தது. இதேபோல் உபகோவில்களான இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.3 லட் சத்து 82 ஆயிரத்து 906-ம், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.21 ஆயிரத்து 209-ம், போஜீஸ்வரர் கோவில் உண்டியல்களில் ரூ.4 ஆயிரத்து 920-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/1718-kg-of-offerings-collected-via-the-hundis-at-samayapuram-mariamman-temple




