திருப்பதி, தெலுங்கானா மாநிலம் ராயதுர்கத்தை சேர்ந்த திருமணமான பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஷேக் நபி என்பவர் அறிமுகமானார். இருவரும் சேர்ந்து ஓட்டல் ஒன்றை தொடங்கி முடிவு செய்தனர். இதற்காக நபியிடம் அந்த பெண் ரூ. 43 லட்சம் வழங்கினார். ஓட்டல் தொழிலில் நல்ல லாபம் வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அதன் அருகில் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி மைதானம் அமைத்தனர். பாலியல் வன்கொடுமை இதன் தொடக்க விழாவையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, நபி பெண்ணுக்கு போதை கலந்த குளிர்பானத்தைக் குடிக்கக் கொடுத்தார். அவர் மயங்கியதும் தனி அறைக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்தார். அதனை தனது செல்போனில் வீடியோ படம் எடுத்தார். மறுநாள் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெண் தட்டிக்கேட்டார். நபி ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவரிடம் காட்டி, தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை என்றால் அவற்றை அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக பெண்ணை பலாத்காரம் செய்து வந்தார். அவரது துன்புறுத்தல் அதிகரித்ததால், பாதிக்கப்பட்ட பெண் இந்தச் சம்பவம் குறித்து தனது கணவரிடம் கூறினார். பின்னர் ராயதுர்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/woman-sexually-assaulted-by-giving-her-drugs-and-soft-drinks-continued-threats-by-showing-the-video




