பூஞ்ச் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 6 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ஷீந்திரா என்ற இடத்திற்கருகே சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று இன்று மாலை திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. 6 பேர் பலி இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் ஆவர். தவிர 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/vehicle-overturns-in-kashmir-gorge-6-killed




