விழுப்புரம், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் பவுர்ணமி கிரி வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு ரெயில் இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் தெற்கு ரெயில்வே சார்பில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதாவது வருகிற 27-ந் தேதி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம். மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/pournami-girivalam-special-train-from-villupuram-to-tiruvannamalai-on-27th




