திருவாரூர், மண்ணில் புதைந்திருந்த 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, பெருமாள், விஷ்னு, அம்மன் சிலைகள் பீடம் உள்ளிட்ட 9 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மண்ணில் புதைந்த நிலையில் சாமி சிலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமம் நரிக்குறவர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்கணேஷ், சின்னதுரை. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு உடும்பு பிடிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவில் பின்புறம் சென்றனர். அப்போது உடும்பு ஒன்று அருகே இருந்த புதருக்குள் புகுந்துள்ளது. இதைக்கண்ட சின்னதுரை, ஜெய்கணேஷ் ஆகியோர் இரும்புக் கம்பி மூலம் புதரை தோண்டினர். அப்போது அங்கு மண்ணில் புதைந்த நிலையில் ஒரு சாமி சிலை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மன்னார்குடி உதவி கலெக்டர் யோகேஸ்வரன், தாசில்தார் நக்கீரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் புதர்களை தோண்டினர். தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு அப்போது மண்ணில் புதைந்திருந்த 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, பெருமாள், விஷ்னு, அம்மன் சிலைகள் பீடம் உள்ளிட்ட 9 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகுதான் இந்த சிலைகள் வெண்கல சிலைகளா? அல்லது ஐம்பொன் சிலைகளா? என தெரியவரும் என்று தாசில்தார் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvarur-nine-deity-idols-unearthed-while-digging-a-pit-near-a-temple




