புதுடெல்லி, டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் அது கூடும். 139வது கூட்டம் அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139ஆவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக கூடுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 10 டிஎம்சி மட்டுமே கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதம் 45.5 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டிஎம்சி திறக்க வேண்டிய நிலையில் 10 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/the-cauvery-water-regulation-committee-meets-in-delhi-today




