சென்னை, மழைக்காலம் என்றாலே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பல இடங்களில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையிலும் டெங்கு பாதிப்பு ஏற்படுவது ஏன் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:- மழை இல்லாத காலங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக தண்ணீரை சேமித்து வைப்பது வழக்கம். குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டிருந்தால் அவற்றிலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட வாய்ப்பு உள்ளது. மேலும், பூந்தொட்டிகளின் அடிப்பகுதியில் தேங்கும் தண்ணீர், பழைய டயர்கள், தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் அவை கொசு உற்பத்தி இடங்களாக மாறிவிடும். ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதற்கு அதிக அளவு தண்ணீர் தேவையில்லை. பெண் ஏடிஸ் கொசு தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உட்புறச்சுவரில், தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே முட்டைகளை இடுகிறது. அந்த முட்டைகள் பாத்திரத்தின் சுவரில் ஒட்டிக்கொண்டு இருக்கும். பின்னர் அந்தப்பாத்திரத்தில் இருந்த தண்ணீர் வற்றிவிட்டாலும் முட்டைகள் உடனடியாக அழிந்து விடுவதில்லை. அவை வறண்ட நிலையிலும் பல மாதங்கள் உயிருடன் இருக்கக்கூடும். மீண்டும் அந்தப் பாத்திரத்தில் தண்ணீர் தேங்கும்போதுமுட்டைகள் பொரிந்து புழுக்களாக மாறுகின்றன. பின்னர் அவை வளர்ந்து கொசுக்களாக உருவாகின்றன. இதனால், “இப்போது மழை பெய்யவில்லை; எனவே டெங்கு கொசு உற்பத்தியாகாது" என்று நினைப்பது தவறாகும். எனவே, மழை இல்லாத காலங்களிலும் டெங்கு தடுப்பில் வீடு களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீருக்கு அதிக முக்கியத் துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை முழுமை யாக மூடி வைக்க வேண்டும். குடங்கள், வாளிகள் உள்ளிட்ட பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால் அவற்றையும் மூடி வைக்க வேண் டும். தண்ணீர் காலியானதும் பாத்திரங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு சுகாதார நிபுணர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-dengue-fever-spreading-despite-the-lack-of-rain-experts-reveal-startling-information




