டெல்லியில் இன்று (30-ம் தேதி) 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ``இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்க வலியுறுத்தி, 'இந்தியா' கூட்டணியின் சார்பில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு, தேர்தல் ஆணையத்தை ஆளும் பாஜக தவறாகப் பயன்படுத்தியதே காரணம். தேர்தல் விவகாரத்தில் SIR நடவடிக்கைகள் மூலம் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை மற்றும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்தியா கூட்டணி மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கமளித்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் முன்வைத்த எதிர்ப்புகளையும் கருத்துகளையும் இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. "நாங்கள் இணைந்து முடிவெடுத்தோம்" என்று மழுப்பலாகப் பதிலளிக்கிறார்களே தவிர, அந்தப் பதிவுகள் தவறானவை என்று தலைமைத் தேர்தல் ஆணையரோ அல்லது பிற தேர்தல் ஆணையர்களோ மறுப்பு அறிக்கை வெளியிடவில்லை. இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்றாக அமைகிறது. இப்பிரச்னை என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கூட்டணி சார்ந்த விஷயம் அல்ல. இது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் மவுனம் தொடர்பான பெரும் பிரச்னையாகும். எனவே, கூட்டணியை விட்டுச் சென்ற கட்சிகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துத் தரப்புச் சக்திகளும் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். திருமாவளவன் இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கார்கே, ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தேசத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைத்துத் தரப்பினருக்கும் வெளிப்படையான அழைப்பை விடுத்துள்ளனர். வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலும் இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் ஜனநாயகப் பண்பாட்டிற்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் கட்சி சார்பற்ற முறையில் வெகுண்டெழுந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார். INDIA BLOC: ``நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை" - ராகுல் காந்தி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/thirumavalavan-met-with-reporters-after-the-india-alliance-consultative-meeting




