சென்னை, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான, நெடுஞ்சாலை முறைகேடு வழக்கில் உத்தரவை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரியும் எ.வ.வேலு சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். லுக் அவுட் நோட்டீஸ் ரத்து இந்த மனுக்கள் மீது கடந்த மாதம் 28-ம்தேதி நடந்த விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வக்கீல், விரிவான பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க ஆகஸ்ட் 14-ந்தேதி (இன்று) வரை கால அவகாசம் வழங்கினார். எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், எ.வ.வேலு விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இடைக்கால உத்தரவு இருப்பினும், வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் கீழமை கோர்ட்டின் அனுமதியை பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐகோர்ட்டு விதித்தது. அதே நேரத்தில், எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் இன்று (ஆகஸ்ட் 14-ந்தேதி) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நீட்டிப்பு இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான, நெடுஞ்சாலை முறைகேடு வழக்கின் இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harsh-action-should-be-taken-against-former-minister-ev-velu-madras-high-court




