கோவை, கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொடுத்த ரூ.10 லட்சம் பணத்தை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். ரூ.10 லட்சம் மோசடி கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த திருச்சி அம்பிகாபுரத்தை சேர்ந்த கதிர்வேல் பச்சைமுத்து (வயது 40) மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர், எந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.10 லட்சம் பணத்தை தங்களது சொந்த தேவைக்காக எடுத்து மோசடி செய்தனர். பெண் கைது பணத்தை திருப்பி தராமல் தம்பதியினர் தலைமறைவாகினர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ரவிகுமார் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது ஐஸ்வர்யாவை கைது செய்தனர். தலைமறைவான கதிர்வேலை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-woman-arrested-for-fraud-of-rs10-lakhs-for-atm-refill




