மும்பை, அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி,2 டி20 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றி இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. இந்த நிலையில், 2 போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெற்ற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கவில்லை. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி பாதியில் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சூர்யவன்ஷி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்திய ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இதனால் அவர் அறிமுகமாக இருப்பதை மறைமுகமாக கூறுகிறாரா? என்று தோன்றுகிறது. இன்றைய போட்டியில் அவர் அறிமுகம் ஆனால், குறைந்த வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமையைப் பெறுவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-t20-vaibhav-suryavanshi-makes-his-debut-for-the-indian-team




