கோவை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:- ஒரு அரசியல் இயக்கம் 38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம். இன்றுடன் 38-வது நாள். பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது. அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம். பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். ஆட்சி மாற்றம் 6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல. எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும். 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது. 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது. கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம். தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி தமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது. இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும் வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. நான் முதலில் இந்தியன் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம். நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன். பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம். தவெகவில் அனைவரும் புதியவர்கள் கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது. அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர். போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/like-2026-regime-change-is-certain-in-2031-annamalai-speech




