சென்னை, ‘ஹாய்’ படத்தின் புதிய பாடலான ‘குடிகார நெஞ்சு’ இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா - கவின் கூட்டணி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு ‘ஹாய்’ படத்தின் மூன்று பாடல்கள் ( ‘கண்ணக்குழியா’, ‘ரசகுல்லா’, ‘பச்ச புள்ள’) ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, விஷ்ணு எடவன் எழுதிய வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், பின்னர் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்கான சிறப்பு வீடியோவும் வெளியிடப்பட்டது. துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’ இதற்கிடையில், ‘ஹாய்’ படத்தின் புதிய பாடலான ‘குடிகார நெஞ்சு’ இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை நடிகர் சியான் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம் பாடியுள்ளார். அவரது குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ‘குடிகார நெஞ்சு’ பாடல் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. Dhruv Vikram’s voice. Kudikara Nenju’s vibe. Releasing Today at 5:04 PM! ❤️ Get ready to feel the vibe! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-next-song-from-the-movie-hi-is-releasing-featuring-dhruv-vikrams-vocals




