Vollständiger Artikel
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (ஜூன். 29) பதவி ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. மாணிக்கம் தாகூர் விழா மேடையில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், "தமிழகம் இதுவரை கண்டிராத முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்கிறார். பல முதலமைச்சர்கள், தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்களை எல்லாம் விட மென்மையான முதலமைச்சராக விஜய் இருக்கிறார். தமிழகத்தில் வந்திருக்கக்கூடிய புதிய ஆட்சி லஞ்சம் வாங்காது. தமிழகத்தில் வந்திருக்கக்கூடிய புதிய ஆட்சி வன்முறையைத் தூண்டாது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சைக் கேட்டிருந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தே மாறி இருக்கும். 70 சட்டமன்ற உறுப்பினர்கள் 10 அமைச்சர்கள் ஒரு துணை முதலமைச்சர் என மாறி இருக்கும். இனி காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலம்தான்” பேசியிருக்கிறார். பிரவீன் சக்ரவர்த்தி தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சில மாதங்கள் திமுக-காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது. காங்கிரஸில் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். அதில் முக்கியமானவர்கள் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




