கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. அதனால் மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், தண்ணீரை விரயமாகக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த வரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:-பெங்களூருவில் 1.40 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டியது அவசியமானது. தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. அதனால் பெங்களூருவில் நீர் வீணாவதை தடுப்பது அவசியம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால் நகர மக்கள் குடிநீரை எச்சரிக்கையுடன் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இந்த சூழ்நிலையில் குடிநீரை நீச்சல் குளங்களில் பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க்கப்படும். அதன் பிறகும் விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராத்துடன் தினமும் ரூ.500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.குடிநீரை யாராவது தவறாக பயன்படுத்தினால் அதுகுறித்து பொதுமக்கள் 1916 என்ற உதவி மையத்துக்கு புகார் தெரிவிக்கலாம். இந்த தடை உத்தரவு மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் நீச்சல் குளங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/ban-on-using-drinking-water-for-swimming-pools-in-bengaluru




